spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகர்நாடகவில் யானை பலி.... தமிழக லாரி ஓட்டுனர் கைது....

கர்நாடகவில் யானை பலி…. தமிழக லாரி ஓட்டுனர் கைது….

-

- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர் வனப்பகுதியில் லாரி மோதி யானை பலியானது. தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுல்பேட் தாலுக்காவில் பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து பெண் யானை ஒன்று மத்தூர் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்துகொண்டிருந்தது. மாலை 8 மணி அளவில் யானை நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த போது கோயம்புத்தூர் நகரில் இருந்த வேகமாக வந்த லாரி சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த யானை மீது மோதியதில் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

we-r-hiring

யானை உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஐ.எப்.எஸ் அதிகாரி ரமேஷ் குமார் மற்றும் இதர வனத்துறை அதிகாரிகள் மருத்துவர்களின் உதவியுடன் யானை உடலை உடற்கூறு ஆய்வு செய்த பிறகு இன்று அடக்கம் செய்தனர். யானை உயிரிழக்க காரணமாக இருந்த தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் அய்யா சாமி மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் குமார் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

MUST READ