
கர்நாடக மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்கள் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசு
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடக மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்கள் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், திப்பண்ணா போஸ்ராஜூ ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில், ஜெகதீஷ் ஷெட்டர் அண்மையில் பா.ஜ.க.வில் இருந்து விலகி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் ஆவார். அண்மையில் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் அவர் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா…. மாணவர்களுக்கு நேரில் பட்டங்களை வழங்கிய ஆளுநர்!
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மேலவை உறுப்பினர்கள் தேர்தலுக்கு அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.