- Advertisement -
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்து அரியணை ஏறப்போவது யார் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தன. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.




