
அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டு, களேபரம் நடந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவை மீண்டும் கூடியது.

நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்களால் பரபரப்பு!
அப்போது மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, “பார்வையாளர் மாடத்தில் இருவர் நுழைந்தது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. அனைவரின் கருத்தையும் பரிசீலித்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவையில் எழுந்தது சாதாரண புகை தான்; அது குறித்து அச்சப்படத் தேவையில்லை. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தலா இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து இடர்பாடுகளுக்கு மத்தியிலும் அவை செயல்படுவதை உறுதிப்படுத்துவது நம் பொறுப்பு” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துமீறிய நபர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்!
இதனிடையே, நாடாளுமன்றத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினர், டெல்லி காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, நாடாளுமன்றம் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தது.