spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமக்களவையில் உறுப்பினர்கள் கடும் அமளி....மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

மக்களவையில் உறுப்பினர்கள் கடும் அமளி….மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

-

- Advertisement -

 

மக்களவையில் உறுப்பினர்கள் கடும் அமளி....மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!
Photo: SANSAD TV

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அவைக்குள் உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

we-r-hiring

தென்காசி அருகே தமிழகம்- கேரளா எல்லையில் போக்குவரத்து நெரிசல்!

அவைக்குள் நடந்த அத்துமீறல் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, மத்திய அரசை குற்றம்சாட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு கோஷம் எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி, உறுப்பினர்கள் முழக்கிமிட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக, பாதுகாப்புப் பணியாளர்கள் ஏழு பேரை பணியிடை நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் உத்தரவிட்டுள்ளது.

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

இதனிடையே, மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

MUST READ