அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை
கர்நாடகாவின் சித்ரதுர்கா, தாவனகெரே உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அரசு துறையில் பணி புரியும் அதிகாரிகளுக்கு சொந்தமான 42 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பிதர், தார்வாட், குடகு, ராய்ச்சூர், தாவாங்கேரே, சித்ரதுர்கா உள்ளிட்ட மாற்றங்களில் 48 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) பொறியாளர், பிதரில் மாவட்டத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் குடகு மாவட்டத்தில் துணை மாவட்ட அதிகாரி ஒருவர் என எட்டு மாவட்டங்களில் அரசு துறை அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிகாரிகள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின் போது சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த நீர் பாசன துறை பொறியாளர் மகேஷ் என்பவரது வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர பல சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேபோல் பிற அதிகாரிகள் வீட்டிலும் லோக் ஆயுக்த அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் முடிவில் ஒவ்வொரு அதிகாரிகள் வீட்டில் இருந்தும் எவ்வளவு கைப்பற்றப்பட்டது என்பது குறித்த முழு விவரம் தெரிய வரும்.