spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை!

தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை!

-

- Advertisement -

 

தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை!

we-r-hiring

சபரிமலையில் தங்க அங்கியுடன் இன்று (டிச.27) ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெற்றது.

அடே அப்பா… சிவகார்த்திகேயன் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்…

திருவிதாங்கூர் மகாராஜா சித்திரை திருநாள் பலராமவர்மா வழங்கிய 451 சவரன் தங்க அங்கியுடன், ஐயப்பன் வீற்றிருக்க மண்டல பூஜை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜையால் பக்தர்களுக்கான அனுமதி எண்ணிக்கை 70,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இன்று (டிச.27) நடை அடைக்கப்பட்ட பின் டிசம்பர் 30- ஆம் தேதி மாலை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை திறக்கப்படும். ஜனவரி 15- ஆம் தேதி பந்தள மகாராஜா வழங்கிய திரு ஆபரணங்களுடன் அரசகோலத்தில் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு மகர விளக்கு பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறவுள்ளது.

கார்த்திக்கின் எவர் கிரீன் பையா… மீண்டும் வெளியீடு…

ஜனவரி 20- ஆம் தேதி வரை ஐயப்பனை அரச கோலத்தில் தரிசிக்க, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஜனவரி 21- ஆம் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினர் மட்டும் சிறப்பு பூஜைகள் செய்த பின் கோயில் நடை அடைக்கப்படும்.

MUST READ