மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலுக்கு சென்றடைந்தார் டெல்லி மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி சுவாதி மாலிவால் மணிப்பூருக்கு சென்றுள்ளார்.
“110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு”- தமிழக அரசு அறிவிப்பு!
முன்னதாக, மணிப்பூர் புறப்படுவதற்கு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுவாதி மாலிவால், “மணிப்பூர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான பெண்களைச் சந்திக்க விரும்புவதாக நான் மணிப்பூர் அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், சட்டம், ஒழுங்கு சரியில்லாததால் எனது பயணத்தை ஒத்திவைக்குமாறு அரசாங்கத்திடம் இருந்து எனக்கு கடிதம் வந்தது.
கொலை, பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 92 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!
என்னைத் தடுக்காமல், நான் மணிப்பூர் செல்ல ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாநில அரசிடம் கேட்டுக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.