

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பா.ஜ.க. களமிறக்கியுள்ளது.
கர்நாடகாவில் பந்த்- தமிழக பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கம்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் சிங் படேல், நரேந்திர சிங் தோமர் உள்ளிடோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
நீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயி மாரடைப்பால் மரணம்- வைகோ இரங்கல்
மத்திய அமைச்சர்களின் பெயர்கள் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


