spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஐதராபாத்தில் மைனர் பெண் கூட்டு பாலியல் - 7 பேர் கைது

ஐதராபாத்தில் மைனர் பெண் கூட்டு பாலியல் – 7 பேர் கைது

-

- Advertisement -

ஐதராபாத்தில் கஞ்சா போதையில் சகோதரர்களை கத்தியை காட்டி மிரட்டி மைனர் பெண்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லாலாப்பேட்டை சாந்தி நகரைச் சேர்ந்த சிறுமி (14) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது சகோதரர்களுடன் நந்தனவனத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.  இம்மாதம் 19ம் தேதி மங்கல்ஹாட் மற்றும் சீதாராம்பேட்டையை சேர்ந்த மெக்கானிக் அபேத் ஆகியோர் நந்தனவனம் வந்தனர். அப்போது மைனர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டனர். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அவர்களை கண்டித்துள்ளனர்.

ஐதராபாத்தில் மைனர் பெண் கூட்டு பாலியல் - 7 பேர் கைது

we-r-hiring

இந்நிலையில், கடந்த 21ம் தேதி இரவு 11 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது இரு சகோதரர்களுடன் வீட்டில் இருந்துள்ளார். தன்னை உறவினர்களுடன் சேர்ந்து திட்டு வாங்க வைத்ததை நினைத்து கஞ்சா போதையில் இருந்த அபேத், தனது நண்பர்களான டைசன், மகேஷ் ஆகிய இருவருடன் மைனர் பெண் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றனர்.

ஐதராபாத்தில் மைனர் பெண் கூட்டு பாலியல் - 7 பேர் கைது
சிறுமியின் சகோதரன்

வீட்டில் இருந்த சகோதரர்களை கத்தியை காண்பித்து மிரட்டி அபேத் முதலில்  மைனர் பெண்னை பாலியியல் பலாத்காரம் செய்துள்ளார்.  அதன்பிறகு, தஹ்சீன், நந்தனவனம் வம்பே காலனியைச் சேர்ந்த மங்கல மகேஷ் (20), அதே பகுதியைச் சேர்ந்த எம்.நர்சிங் அலியாஸ் பேங் சின்ன (23), அஷ்ரப் (20), ரசூல்புரத்தைச் சேர்ந்த எம்.டி.பைசல் (21), எம்.டி.இம்ரான் ஆகியோர் கத்தியை காண்பித்து மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சகோதரர்களுடன்  மீர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனிப்படை அமைத்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியான அபேத்தை சந்தோஷ்நகர் சந்திப்பில் கைது செய்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்த மகேஷ், நரசிங், அஷ்ரப், எம்.டி.பைசல், எம்.டி.இம்ரான், தஹ்சீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.    முக்கிய குற்றவாளியான அபேத் மீது மங்கல்ஹாட் காவல் நிலையத்தில்  ஏற்கனவே ரவுடி ஷீட் வழக்கு உள்ளது தெரிய வந்தது.

ஐதராபாத்தில் மைனர் பெண் கூட்டு பாலியல் - 7 பேர் கைது

இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது  என ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் டி.எஸ்.சௌஹான் தெரிவித்தார்.

MUST READ