Homeசெய்திகள்இந்தியாஅனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- மோடி

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- மோடி

-

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- மோடி

அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்துக்கு அடையாளம் இந்தியா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Image

டெல்லியில் 2 நாள் நடைபெற உள்ள ஜி20 மாநாடு தொடங்கியது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஜி-20 மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுவருகிறது. முதல் அமர்வில் காலநிலை பற்றி விவாதிக்கப்படுகிறது.

ஜி 2௦ மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கோவிட் தொற்றினாலும், போரினாலும் உலக அளவில் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது. நம்பகத்தன்மையை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகுக்கு சரியான திசையை காட்ட வேண்டிய முக்கியமான நேரமிது, இந்தியாவின் ஜி20 தலைமை அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம் என்பதற்கு அடையாளமாக அமைந்திருக்கிறது. அனைவரின் வளர்ச்சி அனைவரின் ஆதரவு என்ற கொள்கை நோக்கத்தில், ஆப்ரிக்க யூனியனுக்கு ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினர் உரிமையை அனைவரின் ஒப்புதலுடன் இந்தியா வழங்கியுள்ளது.பயங்கரவாதம், வடக்கு-தெற்கு பிரிவினை, இணைய பாதுகாப்பு அல்லது சுகாதாரம், எரிசக்தி மற்றும் நீர் பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

பிரதமர் மோடி தனது உரை முழுவதும் இந்தியாவை ‘பாரத்’ என்று குறிப்பிட்டது மட்டுமல்லாமல், அவருக்கு முன்னால் இருந்த பலகையில் இந்தியாவுக்குப் பதிலாக ‘பாரத்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

MUST READ