spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநாராயணமூர்த்தியின் ‘வாரம் 70 மணிநேரம் வேலை’ கருத்து: "வேணும்னா நீங்க வேலை பாருங்க" - தொழிலதிபர்...

நாராயணமூர்த்தியின் ‘வாரம் 70 மணிநேரம் வேலை’ கருத்து: “வேணும்னா நீங்க வேலை பாருங்க” – தொழிலதிபர் நமீதா தாபர்

-

- Advertisement -

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் ‘வாரம் 70 மணிநேரம் வேலை’ கருத்துக்கு தொழிலதிபர் நமீதா தாபர் பதில் கருத்து கூறியுள்ளார்.

நாராயணமூர்த்தியின் ‘வாரம் 70 மணிநேரம் வேலை’ கருத்து: "வேணும்னா நீங்க வேலை பாருங்க" - தொழிலதிபர் நமீதா தாபர்இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, தொழிலாளர்களின் பணி நேரம் குறித்த பேச்சு விமர்சனத்திற்கு உள்ளானது.

we-r-hiring

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது. பிற நாடுகளுடன் போட்டி போட நாம் தயாராக இருக்க வேண்டும். நம் நாட்டு இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று இன்போசிஸ் நாராயண மூர்த்தி கூறியிருந்தார். அவர் பேசியதற்கு கடுமையான விமர்சனங்கள் ஏழுந்தது. இருந்த போதும் தனது கருத்தில் இருந்து நாராயண மூர்த்தி பின் வாங்காமல், மாறாக தனது கருத்தை நியாயப்படுத்தும் விதமாக அதற்கு விளக்கம் அளித்து அவர் மீண்டும் பேசினார்.

அவ்வாறு 70 மணி நேரம் வேலை செய்தால் குடும்பத்தினருடன் சுத்தமாக நேரத்தைச் செலவிட முடியாது என்றும், இயந்திரத்தனமான வாழ்க்கையாக மாறிவிடும் எனவும் விமர்சினங்கள் வந்தது. அதேநேரத்தில் நாராயண மூர்த்தியின் கருத்து முதலாளித்துவ பார்வையில் இருப்பதாகவும் ஊழியர்களை பற்றி அவர் எதுவும் சிந்திக்கவில்லை என்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்துக்கள் பதிவாகின.

கடுமையான விமர்சனங்கள் வந்த போதும் தனது கருத்தில் இருந்து நாராயண மூர்த்தி பின் வாங்கவில்லை. மாறாக தனது கருத்தை நியாயப்படுத்தும் விதமாக நாராயணமூர்த்தி பேசி வருகிறார்.

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் ‘வாரம் 70 மணிநேரம் வேலை’ கருத்துக்கு தொழிலதிபர் நமீதா தாபர் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

“வேணும்னா நீங்க வேலை பாருங்க”

பெரிய நிறுவனங்களில் டன் கணக்கில் பணம் ஈட்டும் நிறுவன தலைவர்கள், தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் வேண்டுமானால் வாரம் 70 மணிநேரம் வேலை செய்யட்டும். கடைசி வரை தினசரி 24 மணிநேரம் கூட வேலை செய்யட்டும். ஆனால், அதையே குறைந்த ஊதியம் வாங்கும் ஊழியர்களிடம் எதிர்பார்ப்பது நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் ரெட்ரோ: ஒஹோ.. இதுதான் கதையா..?

MUST READ