spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சூர்யாவின் ரெட்ரோ: ஒஹோ.. இதுதான் கதையா..?

சூர்யாவின் ரெட்ரோ: ஒஹோ.. இதுதான் கதையா..?

-

- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து சில மாதங்களாகிவிட்டன. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார் சூர்யா. இந்நிலையில், கார்த்திக்சுப்புராஜ் படத்துக்கு ரெட்ரோ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரத்யேக டீசரும் வெளியிடப்பட்டிருக்கிறது.

முதலில் இந்த படத்துக்கு ஜானி என்ற தலைப்பு பேசப்பட்டது. இப்போது ‘ரெட்ரோ.’ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

we-r-hiring

அடுத்த ஆண்டு படம் ரிலீஸ். கங்குவா வெற்றி பெறாத நிலையில் ரெட்ரோவை பெரிதும் நம்பியிருக்கிறார் சூர்யா. எமோஷனன், ஆக்ஷன் கலந்த ரெட்ரோவை வெற்றி பெற வைக்க கார்த்திக் சுப்புராஜூம் உழைக்கிறார். காரணம், அவருக்கும் ஒரு பிரம்மாண்ட வெற்றி தேவைப்படுகிறது. லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றி பெற்றதால், அதை தக்க வைக்க இன்னொரு வெற்றி தேவைப்படுகிறது.

மாஸ் ப்ளஸ் கிளாஸ்.... 'சூர்யா 44' படத்தின் வேற லெவல் டைட்டில் டீசர் வெளியீடு!

ஏனோ பூஜா ஹெக்டேவுக்கும் தமிழில் ஒரு ஹிட் படம் அமையவில்லை. அவரும் ரெட்ரோவை ரொம்பவே நம்பியிருக்கிறார். சூர்யாவுக்கு தியேட்டரில் ஒரு படம் வெற்றி பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆகவே பலரும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் படம் ரெட்ரோ. தமிழ் தவிர, தெலுங்கிலும் ரெட்ரோ வெளியாகிறது. அனேகமாக, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகலாம்.

ஒரு கோபக்கார இளைஞன் தன் மனைவிக்கு வாக்குறுதியளித்துவிட்டு, வன்முறை வாழ்க்கையை விட்டு வெளியேறுகிறான். ஆனால் அவனுக்கு எதிரிகளால் பிரச்சனை வருகிறது. அவன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்கிறானா? என்பது ரெட்ரோ கதை. அந்த இளைஞனாக சூர்யாவும், மனைவியாக பூஜா ஹெக்டேயும் நடித்துள்ளனர்.

MUST READ