Homeசெய்திகள்இந்தியாநீட் மறுதேர்வு - வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை

நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை

-

- Advertisement -

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் தேர்வு மையங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய விமானப்படை களமிறக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் கல்வி அமைச்சகம் இணைந்து இந்த முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.நீட் மறுதேர்வு - வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படைஜூன் 21 ல் நடைபெறவுள்ள நீட் மறுதுர்வுக்கான வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய விமானப்படை களமிறங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள 18 விமானப்படை தளங்களுக்கு முதற்கட்டமாக வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பணிக்காக இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற விமான வசதிகள் பயன்படுத்தப்படவுள்ளன. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு ஒன்றிற்காக முப்படைகளின் தளவாட ஆதரவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ரத்து செய்யப்பட்ட தேர்வுக்குப் பதிலாக நடைபெறும் இந்த மறுதேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

we-r-hiring

தேர்வின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எந்தவித அச்சமும் இன்றி தேர்வை எதிர்கொள்ள முடியும் என்றும், தேர்வு முறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக களம் இறங்கும் கரப்பான் பூச்சி கட்சி…

MUST READ