spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபுதிய நீதி தேவதை சிலை - ஏன் இந்த மாற்றம் ?

புதிய நீதி தேவதை சிலை – ஏன் இந்த மாற்றம் ?

-

- Advertisement -

புதிய நீதி தேவதை சிலை - ஏன் இந்த மாற்றம் ?

கண்கள் கட்டப்படாத, கையில் புத்தகம் என புதிய நீதி தேவதை சிலை  உச்சநீதிமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்திய நீதி தேவதையின் சிலை, கையில் வாளோடும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் இருக்கும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், பணம், அதிகாரம் ஆகியவற்றை சட்டம் பார்க்காது என்பதையும் குறிக்கும் வகையில், கண்கள் கட்டப்பட்டிருக்கும்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான நூலகத்தில், கண்கள் கட்டப்படாத, வாள் இல்லாத நீதி தேவதை சிலை திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்டம் பார்வையற்றது அல்ல என்பதை குறிக்கும் வகையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், புதிய நீதி தேவதையின் சிலையில், வாளுக்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகம் இடம் பெற்றுள்ளது. வாள் என்பது வன்முறை குறிக்கும் என சந்திரசூட் கருதுவதாகவும், எனவே வாளுக்கு பதில் அரசியலமைப்பு புத்தகம் இடம்பெற வேண்டும் என்பது அவரது கருத்து எனவும் சொல்லப்படுகிறது.

MUST READ