spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஜியோ டிவி+ வழங்கும் புதிய சலுகைகள்!

ஜியோ டிவி+ வழங்கும் புதிய சலுகைகள்!

-

- Advertisement -

ஜியோ டிவி+ வழங்கும் புதிய சலுகைகள்!ஜியோ டிவி ப்ளஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் 800 டிஜிட்டல் சேனல்களையும், 13 ஓடிடி ஆப்களையும் அவர்களது ஸ்மார்ட் டிவியில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பெறலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ டிவி+ செயலியை அனைத்து முன்னணி ஸ்மார்ட் டிவிகளிலும் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதில் சிங்கிள் சைன் ஆன், குழந்தைகளுக்கான பிரத்யேக சேனல் தொகுப்பை உருவாக்குதல் போன்ற பலன்கள் உள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ டிவி+-ல் கலர்ஸ் டிவி, இடிவி, சோனி சப், ஸ்டார் ப்ளஸ், ஜிடிவி, ஆஜ்தக், இண்டியா டிவி, , ஏபிபி நியூஸ், நியூஸ்1, சோனி டென், ஸ்போர்ட்ஸ் 18, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், யூரோ ஸ்போர்ட், டிடி ஸ்போர்ட்ஸ், மற்றும் இன்னும் சில சேனல்களைப் பெறலாம் என தெரிவித்துள்ளனர். இவற்றில் குழந்தைகளுக்கான சேனல்களும், பக்தி சேனல்களும் இருப்பதாக கூறியுள்ளனர்.

we-r-hiring

ஓடிடி தளங்களைப் பொறுத்தவரை ஜியோசினிமா ப்ரீமியம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5, டிஸ்கவரி, ஹொய்சோய், லயன்ஸ்கேட் ப்ளே, ஃபேன்கோட், இடிவி வின், ஷீமாரூமி, ஈராஸ், அல்ட் பாலாஜி ஆகியவை உள்ளது. இந்தச் சலுகையை ஜியோஃபைப்ர் ப்ளான் எடுத்துள்ளோரும், ஜியோ ஃபைபர் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு ப்ளான்களை பெற்றவர்களும் பயன்படுத்தலாம்.

ஜியோ டிவி+ செயலியை Android TV, Apple TV ஆப் ஸ்டோர்கள் மற்றும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் மூலம் டவுன்லோட் செய்யலாம். ஜியோ டிவி+ செயலியில் 10 வெவ்வேறு மொழிகளில் 800+ டிஜிட்டல் டிவி சேனல்களைப் பெறலாம். இது தவிர வாடிக்கையாளர்கள் 13 ஓடிடி சேனலிலும் சிங்கள் லாகினில் 2 ஸ்மார்ட் டிவிக்களில் விரும்பியவற்றை தேர்வு செய்து காணலாம் என்று தெரிவித்துள்ளனர்.

MUST READ