
டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று (செப்.19) சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (செப்.18) நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. பழைய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில், பழைய நாடாளுமன்றத்தின் நினைவலைகளை பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைத்து அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் பகிர்ந்துக் கொண்டனர்.
இந்த நிலையில், இன்று (செப்.19) பிற்பகல் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்
மக்களவை அலுவல்கள் இன்று பிற்பகல் 01.15 மணிக்கு புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கும் எனவும், மாநிலங்களவை அலுவல்கள் இன்று பிற்பகல் 02.15 மணிக்கு புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.