மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்
ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 27). இவர் அம்பத்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இதே அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சாரம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதம் முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

சாரம்மாள் (வயது 25) ஏற்கனவே திருமணம் நடந்து இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற விவரம் தெரிந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஜான்சன், ஆவடி ஜீவா நகரில் உள்ள வீட்டில் கடந்த 16ஆம் தேதி சாரம்மாளை கழுத்தறுத்து கொலை செய்து கோணியில் அடைத்து வைத்ததாக காவல் நிலையத்தில் ஜான்சன் பரபரப்பு வாக்குமூலம் அளித்து சரண் அடைந்துள்ளார்.
இதுகுறித்து ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சாராம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் காவல்துறை ஜான்சன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.