Homeசெய்திகள்இந்தியாபீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்!

பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்!

-

 

பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்!
Photo: ANI

பீகார் மாநில முதலமைச்சராக 9ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ்குமார்.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் இன்று (ஜன.28) காலை 10.00 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநரைச் சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பீகார் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரைச் சந்தித்த நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தின் 9 ஆவது முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார்.

பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், 9ஆவது முறையாக மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர ஆர்லேக்கர் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

“விருப்பப் பட்டியலை காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை”- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!

முதலமைச்சர் நிதிஷ்குமாரைத் தொடர்ந்து பா.ஜ.க.வைச் சேர்ந்த சாம்ரட் சவுத்ரி, பிரேம் குமார், விஜயகுமார் சின்ஹா உள்பட 8 பேர் மாநில அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ