- Advertisement -
அக். 12-ம் தேதி கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்
அக்டோபர் 12-ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க, காவிரி ஆணையம் உத்தரவிட்டும் உரிய நீரை வழங்க, கர்நாடகா மறுப்புத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டத்திற்கு, குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 29ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. 3,000 கன அடி நீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கர்நாடகா கோரிக்கை வைத்திருந்த நிலையில், அக்டோபர் 12ஆம் தேதி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது.