spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்"- பிரதமர் நரேந்திர மோடி பேட்டி!

“ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்”- பிரதமர் நரேந்திர மோடி பேட்டி!

-

- Advertisement -

 

"ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்"- பிரதமர் நரேந்திர மோடி பேட்டி!
Photo: PMO

ஒடிஷா மாநிலத்தின் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல், ஹவுரா ரயில்கள், சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 261 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 900- க்கும் மேற்பட்டோர் ஒடிஷா மாநில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

we-r-hiring

நடுரோட்டில் பற்றி எரிந்த பேருந்து

இந்த நிலையில், ரயில் விபத்து நடந்த இடத்தில் இன்று (ஜூன் 03) மாலை 05.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். அத்துடன், தேசிய பேரிடர் மீட்புப் படையின் அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

"ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்"- பிரதமர் நரேந்திர மோடி பேட்டி!
Photo: PMO

அதேபோல், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரிடம் பிரதமர், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து, பாலசோர் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர், அங்கு சிகிச்சைப் பெற்று வருவோரிடம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதேபோல், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைக் குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்த பிரதமர், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்துக்கு இதுவே காரணம்!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, “ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக, அனைத்து கோணத்திலும் விசாரிக்கப்படும். ஒடிஷாவில் நிகழ்ந்த ரயில் விபத்து மனவேதனை அளிக்கிறது. ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அரசு ஒருபோதும் கைவிடாது.

மீட்பு பணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி. அதேபோல், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ