
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் இன்று (அக்.30) மதியம் 02.00 மணிக்கு நடைபெற்றது. காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன், தலைமைப் பொறியாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், காவிரியில் 16 டி.எம்.சி. தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழக அரசு சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த சொகுசு பேருந்து!
நவம்பர் 01- ஆம் தேதி முதல் தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழுப் பரிந்துரைச் செய்துள்ளது. இந்த பரிந்துரையைப் பரிசீலித்து, காவிரி மேலாண்மை இறுதி முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.