அசாம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்கட் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் விமானம் தரையிறங்கியபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஓடுதளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சில நொடிகளிலேயே விமானம் திடீரென வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விமானப்படை மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விமானப்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசாமில் இந்திய விமானப்படை விமானம் தரையிறங்கிய சில நொடிகளிலேயே தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு
