
100 கோடி பசித்த வயிறுகள் இருக்கும் நாடாகப் பார்க்கப்பட்ட இந்தியா பெரும் லட்சியங்களுடன் இருக்கும் 200 கோடி திறன் மிகுந்த கரங்களின் நாடாக மாறியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரஜினி அண்ணன் அழைத்தால் சிவாஜி ப்ரொடக்ஷனில் திரைப்படம் பண்ண தயார்:நடிகர் பிரபு
ஜி20 மாநாடு தொடங்கவிருக்கும் நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, சிறப்புப் பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, “ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிப்பது, எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது; அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் இருக்கும் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க இந்தியர்களுக்கு பெரும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
நீண்ட காலமாக இந்தியா 100 கோடி பசித்த வயிறுகளில் நாடாகப் பார்க்கப்பட்டதாகவும், அது இப்போது 100 கோடி லட்சியங்கள் கொண்ட மனம், 200 கோடி திறமையான கரங்களாகப் பார்க்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் தமது அரசு, உலக நாடுகளுக்கு வழிகாட்டுவதாக உள்ளது.
திருநின்றவூரில் மொபைல் டவரை காணோம்: சினிமா காமெடி நிஜமானது
2047- ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்; நமது தேசிய வாழ்வில் ஊழல், ஜாதிவெறி வகுப்புவாதத்திற்கு இடமில்லை. காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசத்தில், ஜி20 மாநாடு, கருத்தரங்குகள் நடைபெற்றது குறித்து சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆட்சேபனைகளை நிராகரித்த பிரதமர், ஐ.நா.வில் சீர்திருத்தங்கள் உடனடி தேவை” என்றார்.