spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதிருநின்றவூரில் மொபைல் டவரை காணோம்: சினிமா காமெடி நிஜமானது

திருநின்றவூரில் மொபைல் டவரை காணோம்: சினிமா காமெடி நிஜமானது

-

- Advertisement -

திருநின்றவூரில் மொபைல் டவரை காணோம்: சினிமா காமெடி நிஜமானது

ஆவடி அடுத்து திருநின்றவூரில் கோமதிபுரம் மற்றும் நடுகுத்தகை, பவானி நகர் உள்ளது. இங்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏர்செல் தொலைதொடர்பு நிறுவனம் மொபைல் டவரை நிறுவியுள்ளது. அதன்பின் ஏற்பட்ட பல்வேறு காரணங்களால் அந்நிறுவனம் மூடப்பட்டது.

திருநின்றவூரில் மொபைல் டவரை காணோம்: சினிமா காமெடி நிஜமானது

we-r-hiring

இந்நிலையில் கடந்த 2022 மார்ச் மாதம் 30 ஆம் தேதி புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஏர்செல் தனியார் நிறுவன அலுவலர் கிருஷ்ணமூர்த்தி திருநின்றவூரில் உள்ள இரண்டு மொபைல் டவர்களை ஆய்வு செய்தார். அப்போது அவ்விடங்களில் மொபைல் டவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே ஆன்லைன் மூலமாக திருநின்றவூர் குற்ற பிரிவு போலீசார் மற்றும் ஆவடி துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். ஓராண்டு காலம் ஆகியும் அவர் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் திருநின்றவூர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

திருநின்றவூரில் மொபைல் டவரை காணோம்: சினிமா காமெடி நிஜமானது

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி நேற்றுமுன் தினம் மாலை திருநின்றவூர் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான இரண்டு டவர்களின் மதிப்பு 36 லட்சம் என கூறப்படுகிறது.

மொபைல் டவர் காணாமல் போனது வடிவேலு படத்தின் ‘கெனத்தை காணோம்’காமெடி நினைவுக்கு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

MUST READ