
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையிலான சந்திப்பின் போது, திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன குழந்தைகளை விரைவில் கண்டுபிடிக்கப்படும் – டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
வரும் ஜூன் 21- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு அரசுமுறைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அப்போது, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அந்த சந்திப்பின் போது, ஆலோசிக்கப்பட உள்ள விசயங்கள் குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அமெரிக்க அதிபர், பிரதமர் இடையிலான சந்திப்பின் போது, இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்தும், திறந்த பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அளிக்கும் இரவு விருந்தில் பிரதமர் கலந்து கொள்ளவிருக்கிறார்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி தொடர்ந்து இயங்க அனுமதி
வரும் ஜூன் 24- ஆம் தேதி வரை அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பிரதமர், அமெரிக்கா வாழ் இந்தியர்கள், முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன், வெளியுறவுத்துறை டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அரசு உயரதிகாரிகளும் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கின்றனர்.