Homeசெய்திகள்இந்தியாதமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!

தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!

-

 

தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!

பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறினார்.

இந்தியில் ரீமேக் ஆகும் தெறி…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) காலை 10.00 மணிக்கு பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதேபோல், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்று தமிழில் வாழ்த்துத் தெரிவித்து பொங்கல் விழாவில் தனது உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, “தள்ளா விளையும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டினார்.

அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தமிழ்ப் பெண்கள் வீடுகளில் போடும் வண்ணக் கோலங்களில் பெரிய மகத்துவம் மறைந்துள்ளது. பல புள்ளிகள் இணைந்து கோலமாவது போல் பல தரப்பினர் இணைந்தால் நாடு அழகாகிறது. சிறு தானியங்களைக் கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இளைஞர்கள் உருவாக்குகின்றனர். பல தரப்பட்ட மக்களை இணைக்கும் பணியைத் தான் காசி தமிழ்ச்சங்கம், சவுராஷ்டிரா சங்கம் செய்கின்றன.

பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கியவர் யார்?….. தீயாய் பரவும் புகைப்படம்!

விளைவித்த நெல் மணிகளை பொங்கலின் போது, இறைவனுக்கு படைப்பது பாரம்பரியமானது. நமது ஒவ்வொரு விழாவும் விவசாயிகளுடன் தொடர்புடையவை” எனத் தெரிவித்துள்ளார்.

லோஹ்ரி, மகர சங்கராந்தி, மக் பிஹு பண்டிகைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ