பீகாரில் நீதிமன்றத்திற்கு கைதிகளை அழைத்துச் செல்லும் போது, வாகனத்தில் எரிபொருள் இருந்ததால், காவலர்கள் எடுத்த முடிவு இணையத்தில் பேசுப் பொருளாகியுள்ளது.
சருமத்தில் உண்டாகும் வெண் புள்ளியை குணமாக்கும் நுணா இலை மூலிகை!
அங்கு சட்டவிரோதமாக மது விற்ற வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை பாகல்பூரில் உள்ள நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது, கசாரி சவுக் பகுதியில் எரிபொருள் தீர்த்தத்தால் வாகனம் நின்றது. என்ன செய்வதென்று யோசித்த காவலர்கள், கைதிகளை வைத்தே வாகனத்தைத் தள்ளச் செய்தனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!
நான்கு கைதிகளும் வாகனத்தைப் பின்னிருந்து தள்ள இந்த காட்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த காட்சியைப் பார்த்த பலரும் நல்ல வேளை கைதிகள் காவலர்களிடம் இருந்து தப்பிக்காமல் அவர்களுக்கு உதவுகிறார்களே என கிண்டல் செய்து வருகின்றனர். அதே நேரம், வாகனத்தைத் தள்ளியது கைதிகள் இல்லை என காவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.