Homeசெய்திகள்இந்தியா"ராகுலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கியது ஏன்?"- கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

“ராகுலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கியது ஏன்?”- கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

-

 

"எதிர்க்கட்சிக் கூட்டம்- ராகுல் காந்தி, கார்கே பங்கேற்பர்": கே.சி.வேணுகோபால் பேட்டி!
File Photo

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பாஜக நிர்வாகி

பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வுத் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பில், “பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேச்சுகளில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகுல் காந்திக்கு அதிகபட்சத் தண்டனையை வழங்கியது ஏன் என்ற விளக்கத்தை கீழமை நீதிமன்றம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சூரத் நீதிமன்ற நீதிபதியும் விளக்கம் அளிக்க வேண்டும். தண்டனை ஒருநாள் குறைவாக வழங்கப்பட்டிருந்தாலும் கூட அவர் தனது பதவியை இழந்திருக்க மாட்டார்.

தண்டனையின் காரணமாக, ஒரு தனிநபரின் உரிமை மட்டுமின்றி தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை ஏன் விதிக்கப்பட்டது என்பது பற்றி மனுதாரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். எனவே, ராகுல் காந்திக்கு கீழமை நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிடுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் பாதயாத்திரையில் ரூ.25,000 திருட்டு

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ராகுல் காந்தி எம்.பி. பதவியில் தொடர்கிறார். அதேபோல், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலும் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தான் குற்றம் இழைக்காததால் மன்னிப்புக் கேட்க முடியாது என ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ