Homeசெய்திகள்இந்தியாசபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

-

- Advertisement -

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
Video Crop Image

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மழை ஓய்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் பக்தர்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கின. அதிகாலை 03.00 மணிக்கு நடைத்திறந்தது முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

காஷ்மீரில் நாள்தோறும் 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு!

நீண்ட வரிசையில் இருமுடியுடன் காத்திருந்த ஐயப்ப பக்தர்கள், அணி அணியாய் சென்று, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் துரிதப்படுத்தியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதானமான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை திருவிழா, கடந்த நவம்பர் 16- ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 60 நாட்கள் நடைபெறும் இந்த பூஜைக் காலத்தில் முதல் நாளில் இருந்து சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. தொடர் கனமழை காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக பக்தர்களின் வருகைக் குறைந்துக் காணப்பட்டது.

“ஜனவரி 07- ஆம் தேதி எல்1 புள்ளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்”- இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!

இதனால் அப்போது வந்திருந்த பக்தர்கள், கூட்ட நெரிசலில் சிக்காமலும் வரிசையில் காத்திருக்காமலும், சாமி தரிசனம் செய்ய சென்றனர். இந்த நிலையில், மழை ஓய்ந்திருப்பதால், தற்போது பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கின.

MUST READ