spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

-

- Advertisement -

 

சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி! பொன்னம்பல மேட்டில் பூஜை - சென்னையை சேர்ந்தவர் சிக்கினார்
சபரிமலை பக்தர்கள்

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று (நவ.16) மாலை ஐயப்பன் கோயில் நடைத்திறக்கப்படுகிறது.

we-r-hiring

ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைகள், சிறப்பு பூஜைகள் தவிர, 60 நாட்கள் நடக்கும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக் காலம் பிரதானமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று (நவ.16) மாலை கோயில் நடைத் திறக்கப்படவுள்ளது.

நடை திறந்தது முதல் வரும் டிசம்பர் 27- ஆம் தேதி வரை தினசரி பூஜைகள் நடக்கும். டிசம்பர் 27- ஆம் தேதி மண்டல பூஜைக்கு பிறகு நடை அடைக்கப்படும். மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக, வரும் டிசம்பர் 30- ஆம் தேதி நடை மீண்டும் திறக்கப்படும்.

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!

2024- ஆம் ஆண்டு ஜனவரி 15- ஆம் தேதி சபரிமலையில் மகரவிளக்கு பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறும். கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் மட்டும் 47 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

MUST READ