
கேரளா மாநிலம், சபரிமலையில் மண்டலப் பூஜைக்காக நாளை (டிச.27) அதிகாலை 03.00 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு, ஐயப்பன் சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். டிசம்பர் 30- ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடைத் திறக்கப்பட்டு, ஜனவரி 15- ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். மகரஜோதி தரிசனத்துக்கு பின் ஜனவரி 19- ஆம் தேதி வரை பக்தர்கள், அரச கோலத்தில் ஐயப்பனைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
58 வயதில் 3-வது பட்டம் பெற்ற நடிகர் முத்துக்காளை
இந்த நிலையில், ஐயப்பப் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கேரள மாநில அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதேபோல், கேரளா மாநில காவல்துறையினர், ஐயப்பன் கோயில் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாபெரும் சாம்ராஜ்யத்தை வளைத்துப்போடும் அம்பானி…
இதனிடையே, சபரிமலை கோயிலில் 39 நாட்களில் ரூபாய் 204.30 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. இதில் காணிக்கையாக ரூபாய் ரூபாய் 63.89 கோடியும், அரவணை பிரசாத விற்பனையில் ரூபாய் 96.32 கோடியும், அப்பம் விற்பனை ரூபாய் 12.38 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது. டிசம்பர் 25 வரையிலான 39 நாட்களில் 31.43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.