ராஜஸ்தானின் ஆசிரியையின் காலை மிதித்து மசாஜ் செய்த பள்ளி மாணவர்கள்
வீடியோ வைரல்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பள்ளி ஆசிரியை ஒருவர் தரையில் படுத்திருக்க பள்ளி மாணவர்கள் சிலர் அவர் காலை மிதித்து மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
கர்தார்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இன்று (அக்.10) வெளியான காட்சிகள், கல்வி அமைப்புகளில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து பள்ளியின் முதல்வர் அஞ்சு சவுத்ரி, தான் வீடியோவைப் பார்த்தேன் என ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் குறிப்பிட்ட சம்பவம் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். ஆசிரியையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம் மேலும் அவருக்கு உதவுமாறு குழந்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று சௌத்ரி கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கப்படும் என்று பள்ளி முதல்வர் கூறியுள்ளார்.
மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை சம்பவம் – 5 பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்