Homeசெய்திகள்இந்தியாவிண்வெளி செல்லும் இந்திய வீரர்கள் அறிவிப்பு!

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள் அறிவிப்பு!

-

 

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள் அறிவிப்பு!
Photo: ANI

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லவிருக்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஈபிஎஸ்

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சுமார் ரூபாய் 1,800 கோடி மதிப்பிலான 3 விண்வெளி உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டார். பின்னர், விண்வெளிக்கு செல்லும் வீரர்களை நேரில் சந்தித்து கைகுலுக்கிப் பாராட்டியதுடன், மிஷன் லோகோவை வழங்கினார். கடந்த ஆறு வருடங்களாக பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களுக்கு மிஷன் லோகோ நடைபெற்றது

திமுக அரசை கண்டித்து அதிமுக வருகிற 04ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர் தலைமையிலான வீரர்கள் அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்சு சுக்லா ஆகிய வீரர்கள் விண்வெளிக்கு சென்று ஆய்வு நடத்தவுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “விண்வெளித்துறையில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது. வீரர்கள் மூன்று நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ