
குஜராத் மாநிலத்தில் பண மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சுரேஷ் ஜகுபாய் படேல் என்பவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வாழ்க்கையை மாற்றிய ராஞ்சனா… 10 வருடங்கள் நிறைவு… நெகிழ்ந்த தனுஷ்!
பண மோசடி வழக்கு தொடர்பாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் ஜகுபாய் படேல் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் கடந்த ஜூன் 19- ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையில், 1 கோடியே 62 லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே சுமார் 1 கோடிக்கு மேல் இருந்துள்ளது. மேலும், 100- க்கும் மேற்பட்ட சொத்துகள் தொடர்பான ஆவணங்கள், பணப்பரிவர்த்தனை ஆவணங்கள், மூன்று வங்கி லாக்கர்களின் சாவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அனிமல் படத்தின் ஷூட்டிங் ஓவர்….. படப்பிடிப்பு குறித்து ராஷ்மிகா வெளியிட்ட உருக்கமான பதிவு!
இது தொடர்பாக, அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் சுரேஷ் ஜகுபாய் படேலுக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


