Homeசெய்திகள்இந்தியாதமிழக அரசின் கல்விப் பாடத் திட்டத்தில் இருந்து வெளியேறிய புதுச்சேரி கல்வித்துறை!

தமிழக அரசின் கல்விப் பாடத் திட்டத்தில் இருந்து வெளியேறிய புதுச்சேரி கல்வித்துறை!

-

 

puducherry

வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் கல்விப் பாடத் திட்டத்தில் இருந்து புதுச்சேரி கல்வித்துறை முழுமையாக வெளியேறியுள்ளது.

கிளைமேக்ஸுக்காக மீண்டும் அஜர்பைஜானுக்கே செல்கிறதா ‘விடாமுயற்சி’ படக்குழு?

புதுச்சேரி மாநிலத்திற்கென்று தனியாக கல்வி வாரியம் இல்லாத நிலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியில் தமிழக அரசின் கல்வி பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் இருந்து 1 முதல் 9 மற்றும் 11- ஆம் வகுப்புகளுக்கு மத்திய அரசின் கல்வி வாரியத்தின் கீழ் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வதந்திகளை தவிடுபொடியாக்கி சாதித்து காட்டிய கவின்!

அதன்படி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என்றும், பள்ளிக்கல்வித்துறைத் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருந்து விலகி, மத்திய அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதன் வாயிலாக பெரும்பான்மையான தமிழக மாணாக்கர்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ