
காவிரி தண்ணீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, தாளவாடி, பண்ணாரி வழியாக கர்நாடகாவிற்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி நள்ளிரவு முதலே கர்நாடகா செல்லும் சரக்கு வாகனங்கள் பண்ணாரி சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளது.

நாய் நன்றியுள்ளது- மனிதனோடு ஒப்பிடாதீர்
வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பண்ணாரி, ஆசனூர், திம்பம் சாலை வெறிச்சோடியுள்ளது. சத்தியமங்கலம், ஈரோடு, கோவையில் இருந்து மைசூரு உள்ளிட்டப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
அதேபோல், நீலகிரியில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து வாகனங்களும் தொரப்பள்ளி மற்றும் மசினகுடி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனைச் சாவடியில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி
தேசிய நெடுஞ்சாலை, ரயில்களைத் தடுத்து போராட்டம் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், கர்நாடகா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, 50,000- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.