Homeசெய்திகள்இந்தியாபயிற்சி பெண் மருத்துவர் கொலை... உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

பயிற்சி பெண் மருத்துவர் கொலை… உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

-

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

கொல்கத்தா ஆர்.ஜி .கர் அரசு மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி, இரவுப்பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறை கைது செய்தது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதேவேளையில், பயிற்சி பெண் மருத்துவர் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!
File Photo

இந்த நிலையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது.

 

MUST READ