spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபேன்ட் நழுவுகிறது... பெல்ட் வேண்டும்: கெஜ்ரிவால்

பேன்ட் நழுவுகிறது… பெல்ட் வேண்டும்: கெஜ்ரிவால்

-

- Advertisement -

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெல்ட் அணிய அனுமதிக்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேன்ட் நழுவுகிறது... பெல்ட் வேண்டும்: கெஜ்ரிவால்

we-r-hiring

மதுபானக் கொள்கை வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை அன்று 3 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம், கெஜ்ரிவாலை விசாரிக்க அனுமதி வழங்கியது. மேலும் ​​காவலில் இருக்கும் போது சில சலுகைகள் வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

காவலின் போது, ​​கெஜ்ரிவால் தனது கண்ணாடியை வைத்திருக்கவும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளவும், வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவும், பகவத் கீதையின் பிரதியை வைத்திருக்கவும், தினமும் ஒரு மணி நேரம் தனது மனைவி மற்றும் உறவினர்களை சந்திக்கவும் அனுமதிக்கப்படுவார்.

பேன்ட் நழுவுகிறது... பெல்ட் வேண்டும்: கெஜ்ரிவால்

திகார் சிறைக்கு செல்லும் போது தனது பேண்ட்டைப் பிடித்துக் கொள்ள வேண்டிய அவமானம் ஏற்பட்டதால் தனக்கு பெல்ட் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டமன்றத்தை முற்றுகையிட்ட பத்து ருபாய் இயக்கம் (apcnewstamil.com)

இந்த தர்மசங்கடத்தை புரிந்துகொண்டு விதியில் தளர்வளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்துள்ளது.

MUST READ