சட்டப்பேரைவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதனை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை பாதுகாக்கவும், வலிமையாக்கவும் மற்றும் தகவல் ஆணைய குறைகளை களைய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தினர், சென்னையில் போராட்டம் நடத்தினர்.
முற்றுகைப் போராட்டத்திற்காக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கிருந்து ஊர்வலமாக சட்டமன்றத்தை நோக்கி புறப்பட முயன்றனர்.
https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/death-toll-in-liquor-tragedy-rises-to-63/95894
முதலமைச்சர் கவனத்தை ஈர்க்க சட்டமன்றத்தை முற்றுகையிடும் நோக்கில் செல்ல முயன்ற அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.