spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருப்பதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

திருப்பதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

-

- Advertisement -

திருப்பதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

அன்னமய்யா மாவட்டத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மூன்று கடத்தல்காரர்களை கைது செய்தனர்.

ஆந்திராவில் செம்மரக்கடத்தல் - ஒருவர் கைது

திருப்பதி சேஷாச்சல வனப் பகுதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து பீலேறு, கே.வி.பள்ளே, கலக்கடா போலீசார் இணைந்து பிலேரு மண்டலத்தில் உள்ள பொந்தலசெருவு அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது ரெனால்ட் டஸ்டர் கார் (ஏபி26 ஏஎக்ஸ் 4509), மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் (டிஎன்49 பி டபிள்யூ 7138) கார், இருசக்கர வாகனங்களை நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் வேலூர் மாவட்டம், கீழகோட்டூரை சேர்ந்த சரவணன் அண்ணாமலை (33), திருவண்ணாமலை மாவட்டம், நமியம்பட்டைச் சேர்ந்த சிவக்குமார் பொன்னுசாமி (27), தசரதன் (26) ஆகியோரை கைது செய்தனர்.

we-r-hiring

ரெனால்ட் டஸ்டர் காரில் 381 கிலோ எடையுள்ள ரூ.9.50 லட்சம் மதிப்புள்ள 13 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சரவணன் அண்ணாமலை தனது நண்பர் ராஜ்குமாருடன் வேலூரில் ரமேஷ் என்ற கடத்தல்காரரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வருவதும் ஏழுமலை, கோவிந்தராஜூ ஆகியோரின் உதவியுடன் நமியம்பட்டு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகளை செம்மரம் வெட்ட சேஷாசலம் வனப்பகுதிக்கு அழைத்து வருவதும் சேஷாச்சல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்ட ஒரு கிலோவிற்கு ரூ.2,500 வீதம் கூலியாக வழங்கி கே.வி.பள்ளே, பீலேறு, காளிகிரி, மதனப்பள்ளி வழியாக ரமேஷ் வழங்கி வந்துள்ள போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அன்னமய்யா மாவட்ட எஸ்பி கங்காதர் ராவ் தெரிவித்தார்.

MUST READ