இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), நாட்டின் பல அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு (Ballistic Missile Defence – BMD) திறனை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து மூன்று அதிநவீன ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் நடைபெற்ற இந்த சோதனைகளில், இடைநிலை மற்றும் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் பரிசோதிக்கப்பட்டது. சோதனையின் போது, விண்வெளி மற்றும் வளிமண்டலத்தில் பாய்ந்து வந்த இலக்குகளை இன்டர்செப்டர் ஏவுகணைகள் துல்லியமாக இடைமறித்து அழித்தன.

2,000 கி.மீ. முதல் 5,000 கி.மீ. வரை பாயக்கூடிய நடுத்தர மற்றும் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தும் திறன் இந்த அமைப்புக்கு இருப்பதாக DRDO தெரிவித்துள்ளது. மேலும், எதிரி நாடுகளின் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை தாக்குதல்களையும் முறியடிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனுடன், நடுத்தர தூர கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை (Naval Anti-Ship Missile) சோதனையும் முதல் முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த தொடர் வெற்றிகள் இந்தியாவின் ஏவுகணை பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், நீண்ட தூர ஏவுகணை அச்சுறுத்தல்களை முறியடிக்கும் திறன் கொண்ட உலகின் முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.
அசாமில் விமானம் விபத்து – தரையிறங்கிய சில நொடிகளில் தீப்பற்றி எரிந்த ஏஎன்-32!
