spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடி சென்ற கொள்ளையர்கள்

ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடி சென்ற கொள்ளையர்கள்

-

- Advertisement -

ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடி சென்ற கொள்ளையர்கள்

கர்நாடக மாநிலம் ஹாசனில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை கொள்ளையடித்த திருடர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தக்காளி - 1

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்குட்பட்ட கோனி சோமனஹள்ளி கிராமத்தில் உள்ள பெண் விவசாயியின் விவசாய வயலில் இருந்து 50-60 தக்காளி மூட்டைகளை திருடர்கள் செவ்வாய்கிழமை இரவு வெட்டிச் சென்றுள்ளனர். அதன் மதிப்பு இரண்டரை லட்சம் ரூபாயாகும். பெண் விவசாயி தாரிணி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டு, நன்கு விளைச்சல் கண்டிருந்த நிலையில், அடுத்த வாரம் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்த சூழலில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

we-r-hiring

Image

இதுகுறித்து தாரிணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ​​“பருப்பு அறுவடையில் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம், ஆகவே கடனை வாங்கி தக்காளி பயிரிட்டோம். அறுவடை சிறப்பாக நடைபெற்றது. தற்செயலாக தக்காளி விலையும் அதிகரித்தது. லாபம் ஈட்டிவிடலாம் என நினைத்துக்கொண்டிருக்கும் சூழலில், இரவோடு இரவாக 50-60 தக்காளி மூட்டைகளை திருடர்கள் எடுத்து சென்றுவிட்டனர். அதுமட்டுமில்லாது, எஞ்சியிருந்த பயிர்களையும் அவர்கள் அழித்துவிட்டு சென்றுவிட்டனர்” என வேதனையுடன் கூறினார்.

MUST READ