
பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஒடிஷா அருகே தடம் புரண்டது. பாஹாநாகா ரயில் நிலையம் அருகே ஹவுரா ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஹவுரா ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் இருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….கர்நாடக மக்கள் மகிழ்ச்சி!
கோரமண்டல் ரயிலில் B2, B3, B4, B5, B6, B7, B8, B9, A1, A2, H1 ஆகிய பெட்டிகள் தடம் புரண்டது. கோரமண்டல் ரயிலின் எஞ்சின் தடம் புரண்டுள்ளதாகவும் ரயில்வேத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரமண்டல் ரயிலின் எஞ்சின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வேத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெங்களூரு ஹவுரா ரயிலின் GS பெட்டிகள் உட்பட 4 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இரண்டு ரயில்களும் தமிழக ரயில் நிலையங்கள் வழியாக செல்வது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் விபத்தில், இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர்; 900- க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரத், சரோ ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோரமண்டல், ஹவுரா ரயில்கள் மோதி கோர விபத்து!
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் விமானப்படையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணிகளில் உள்ளூர் பகுதி வாசிகளும், பொதுமக்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர்.
ரயில் விபத்தை அடுத்து ஒடிஷா வழியே செல்லும் 44 ரயில்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்து நேரிட்ட பகுதி வழியே செல்லும் 36 ரயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.