Homeசெய்திகள்இந்தியாபெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்

பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்

-

- Advertisement -
kadalkanni

சனாதன தர்மம் குறித்து பேசியது தொடர்பான வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆஜராகி உள்ளார்.

பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். அந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்

இதுதொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பரமேஷ் அவரின் சனாதன பேச்சுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார். இதன்மீதான விசாரணையில் ஆஜராகும்படி உதயநிதிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அதையேற்று நீதிமன்றத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.

களத்தில் மீண்டும் போர்வீரர்கள் – மஹுவா மொய்த்ரா (apcnewstamil.com)

அமைச்சர் சேகர் பாபு, எம்.பி.ஆ.ராசா ஆகியோர் மீதும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ