Homeசெய்திகள்இந்தியாஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை - ராகுல் காந்தி

ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை – ராகுல் காந்தி

-

- Advertisement -

ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை - ராகுல் காந்திகவரைப்பேட்டையில்  நடந்த ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழியவேண்டும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நேற்றிரவு சரக்கு ரயிலின் மீது பாகமதி விரைவு ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் இரு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டன.

ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை - ராகுல் காந்தி

இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் தடம் புரண்ட பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை - ராகுல் காந்திஇந்த பணிகளில் 300-க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகா சீரமைப்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் இடை இடையே நிறுத்தப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.

ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை - ராகுல் காந்திஇந்த நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தென்னக ரயில்வேயின் உயர்மட்ட குழுவினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்திற்கு சிக்னல் கோளாறு காரணமா? அல்லது மனித தவறுகள் காரணமா? என உயர்மட்டக்குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அருகே ரயில் விபத்து; உயிர் சேதம் எதுவும் இல்லை

இந்நிலையில்  கவரைப்பேட்டையில்  நடந்த ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழியவேண்டும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ