Homeசெய்திகள்இந்தியாதேர்தல் வியூகம் குறித்து ஜூன் 12- ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

தேர்தல் வியூகம் குறித்து ஜூன் 12- ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

-

- Advertisement -

 

தேர்தல் வியூகம் குறித்து ஜூன் 12- ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை!
File Photo

புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் ஜூன் 12- ஆம் தேதி அன்று பீகார் மாநிலத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, காங்கிரஸ் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் விடுத்த அழைப்பின் பேரில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்த தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோருக்கும் முதலமைச்சர் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி- எப்12 ராக்கெட்!

இந்த கூட்டத்தில், வரும் 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்துவது குறித்தும் தலைவர்கள் ஆலோசிக்கவுள்ளனர்.

நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை உற்சாகப்படுத்தியிருந்த நிலையில், தலைவர்கள் ஆலோசிக்கின்றனர்.

MUST READ