வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் வயலில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்த விமானி, முன்னெச்சரிக்கையாக வயலில் தரையிறக்க முடிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானி கவனத்துடன் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்தியா விமானப்படை, “IAF இன் Apache AH-64 ஹெலிகாப்டர், வழக்கமான செயல்பாட்டு பயிற்சியின் போது, பிந்த் அருகே வயலில் முன்னெச்சரிக்கையாக தரையிறங்கியது. அனைத்து பணியாளர்களும் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளன. ஹெலிகாப்டரை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
An Apache AH-64 helicopter of the IAF carried out a precautionary landing near Bhind, during routine operational training. All crew and the aircraft are safe. The rectification party has reached the site. pic.twitter.com/hhd6wSNgT2
— Indian Air Force (@IAF_MCC) May 29, 2023
AH-64 Apache ஹெலிகாப்டர் உலகின் அதிநவீன மல்டி ரோல் போர் ஹெலிகாப்டர் ஆகும். இந்திய விமானப்படையிடம் 22 AH-64E Apache தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உள்ளன, மேலும் 2020 இல், போயிங் இந்திய இராணுவத்திற்காக மேலும் ஆறு Apache ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.