
‘UPI’ அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை வேகமாக அதிகரித்து வருவதால், டெபிட் கார்டுகள் வரவேற்பை இழந்து வருவது ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்- 11 லட்சம் பேர் மேல்முறையீடு!
கூகுள் பே, போன் பே, பேடிஎம் என எங்கும் நிறைந்திருக்கும் பார் கோடு ஸ்கேனர்கள் தற்போது வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக மாறியுள்ளது. கடைகளில் நேரடி ஷாப்பிங் மட்டுமின்றி, இணையதள வழியாக பணப்பரிவர்த்தனைகளிலும் ‘UPI’ தொழில்நுட்பத்தால் டெபிட் கார்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.
இ-காமர்ஸ் எனப்படும் இணைய வழி வணிகத்தில் டெபிட் கார்டு பயன்பாடு கடந்த செப்டம்பர் மாதத்தில் பாதியாகக் குறைந்துவிட்டது. டெபிட் கார்டுகள் வழியாக பணப்பரிவர்த்தனை மதிப்பு 23% குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கித் தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்!
எனினும், கிரெடிட் கார்டு பணப்பரிவர்த்தனைகள் வாடிக்கையாளரின் வரவேற்பைத் தொடர்ந்து பெற்று வருவதாகவும், மொத்தம் 5 கோடி வாடிக்கையாளர்களிடம் 9 கோடியே 30 லட்சம் கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இ-காமர்ஸ் வணிகத்தில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு 22% அதிகரித்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.