spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் உரிமைத்தொகைத் திட்டம்- 11 லட்சம் பேர் மேல்முறையீடு!

மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்- 11 லட்சம் பேர் மேல்முறையீடு!

-

- Advertisement -

 

கேரளா, தெலங்கானா மாநிலங்களின் வரிசையில் இணைந்தது தமிழ்நாடு!
Photo: TN Govt

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக, தமிழகம் முழுவதும் 11 லட்சம் மேல்முறையீடு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

we-r-hiring

காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம், கடந்த அக்டோபர் 24- ஆம் தேதியுடன் நிறைவுப் பெற்றது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக, தமிழகம் முழுவதும் 11 லட்சம் மேல்முறையீடு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவற்றை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனைச் செய்யப்பட்டு, தகுதியான மகளிருக்கு வரும் நவம்பர் 15- ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்!

இதனிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்ட விதிகளைப் பூர்த்திச் செய்கிற ஒரு மகளிர் கூட விடுபட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

MUST READ